உங்களது வீட்டு அல்லது அலுவலக கணனியை பராமரிப்பது தொடர்பான வழிகாட்டல். கீழ் வரும் படிமுறைகளை பின்பற்றுவதனூடக உங்களது கணனியை பிழையின்றியும் வேகமாக இயங்கவும் வைக்க முடியும்.
1. முதலாவதாக உங்களது கணனி மடிக்கணனி எனின் தூசு பிடிக்காத இடத்தில் பயன்படுத்துங்கள்,அதனை சுத்தமான கைகளால் கையாள வேண்டும், சிலர் உணவு அருத்திய படியே பயன்படுத்துவார்கள், இது தவறான ஒரு வழிமுறை. மடிக்கணனி அருகில் எந்த வித உணவுப்பண்டங்களையும் கொண்டு செல்லாதீர்கள், ஏனெனில் இதன் மூலம் மடிக்கனனிக்குள் எறும்புகள் சென்று கணனியை முழுமையாக பழுதடயசெய்துவிடும். அடுத்து மடிக்கனனியின் பட்டெரியினை (Battery) சரியான முறையில் மின் ஏற்றி பயன்படுத்துங்கள்.
அதே சமயம் உங்களது கணனி (Desktop PC) டெஸ்க் டாப் கணனி எனின் அதைக்கூட தூசி இல்லாத திறந்த இடத்தில் காற்றோட்டம் உள்ள இடத்தில் பயன்படுத்துவது நல்லது, அவ்வாறு இட வசதி இல்லாதவர்கள் மாதம் ஒரு தடவை உங்களது கணனி உள்ள இடத்தையும் கணனியையும் சுத்தம் செய்வது அவசியம். எந்த கணனியையும் ஜன்னல் அருகில் வைத்து பயன்படுத்தி முடிந்ததும் ஒரு துணி கொண்டு மூடிவிடுவது நல்லது, ஏனெனில் கணனி ஏலேக்ட்ரோனிக் பொருட்கள் துருப்பிடிக்காமல் இருக்க இது உதவி செய்யும்.
2. கணனியை வேகமாக இயங்கவைக்க நீங்கள் முதலாவதாக செய்யவேண்டியது தேவையற்ற பைல்களை உங்களது வன்தட்டிலிருந்து அழித்துவிடுங்கள், உங்களது கணனியில் உள்ள அண்டிவைரஸ் மென்பொருளை அப்டேட் பண்ணி பயன்படுத்துங்கள், அண்டிவைரஸ் மென்பொருள் மட்டும் போதுமென எப்போதுமே கருதாதீர்கள் அத்துடன் Antispyware மென்பொருளும் கூடவே உங்கள் கணனியில் நிறுவி அதனையும் அப்டேட் பண்ணி ஸ்கேன் செய்து பயன்படுத்துங்கள்.super Antispyware என்கிற மென்பொருள் இலவசமாக இங்கு கிடைக்கின்றது, இதனை டவுன்லோட் பண்ணி இலவசமாக பயன்படுத்தலாம்
3. அடுத்து நீங்கள் செய்ய வேண்டியது "Disk Defragment" இந்த வசதியை விண்டோஸ் கணனியில் பெற்றுக்கொள்ளலாம், முதலில் கணனியில் C Drive இனை "Disk Defragment" செய்தல் வேண்டும். எல்லா Drive களையும் செய்வது நல்லது.
4. அடுத்து முக்கியமான விடயம் ஒன்று உள்ளது அதாவது உங்களுக்கு தேவையான சகல கோப்புகளையும் ஒருபோதும் C: drive இல் சேமித்து வைக்காதீர்கள். ஏனெனில் வைரஸ் தாக்கிய கணனிக்கு மறுபடி இயங்குதளம் நிறுவுவதற்கு இலகுவாக இருக்கும். நீங்கள் D:, E:, F போன்ற மற்றைய drive களில் உங்களது கோப்புகளை சேமித்து வைக்கலாம். மிக முக்கியமான கோப்புகளை தனியான வெளியில் உள்ள (Pen Drive, External HDD, Memory card)போன்ற சாதனங்களில் பிரதி எடுத்து வைப்பதே புத்திசாலித்தனமான முடிவு. ஏனென்றால் கணனிக்கு வைரஸ் தாக்கமோ அல்லது வன் தட்டில் (Hard Disk Drive) ஏற்படும் திருத்த முடியாத நிலை ஏற்பட்டாலோ இங்கு நான் குறிப்பிட்ட முறைமை உங்களுக்கு நிச்சயம் கைகொடுக்கும்.

No comments:
Post a Comment