Current Weather

Sunday, February 23, 2014

விண்டோஸ் 7 ற்கு கடவுச்சொல் மறந்து போனால் எப்படி மாற்றுவது

கணணி பயனாளர்கள் அவ்வப்பொழுது சந்திக்கிற ஒரு பிரச்சனை,விண்டோஸ் இயங்குதளத்தின்  Admin  கடவுச்சொல்லை மறந்து போவது அல்லது வேறு யாராவது உங்கள் கடவுசொல்லை மாற்றிவிடுவது.இதுபோன்ற சமயங்களில் அந்த குறிப்பிட்ட கணணியில் ஏற்கனவே பதிந்துள்ள மென்பொருட்கள் மற்றும் குறிப்பிட்ட பயனாளர்கணக்கில் சேமித்துள்ள ஆவணங்கள் அனைத்தையும் இழந்து விடுவோம் என்பது பலரது அச்சமாக இருந்து வருகிறது.

விண்டோஸ் 7 இயங்குதளத்தில் இந்த பிரச்சனையை எளிதாக தீர்க்கலாம். இதனை செயல்படுத்த விண்டோஸ் 7  DVD  தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.

விண்டோஸ் 7 Bootable DVD  மூலமாக குறிப்பிட்ட கணணியை தொடங்குங்கள்.  Install  திரையில்   Repair your Computer  லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

அடுத்து வரும்  Options  திரையில்  Command Prompt  ஐ கிளிக் செய்யுங்கள். இப்பொழுது திறக்கும்  Command Prompt  திரையில் கீழே உள்ள கட்டளையை கொடுங்கள்.

copy c:windowssystem32sethc.exe c:

இப்பொழுது  Sticky Keys  கோப்பானது  C: இல் கொப்பி செய்யப்படும். அடுத்ததாக  cmd.exe  கோப்பை  Sticky Keys  இற்கு பதிலாக  Replace  செய்திட வேண்டும். அதற்கு கீழே உள்ள கட்டளையை கொடுங்கள்.

copy c:windowssystem32cmd.exe c:windowssystem32sethc.exe

Overwrite கேட்கும் பொழுது yes கொடுத்து கொப்பி செய்து கொள்ளுங்கள். இனி அடுத்த முறை   Sticky keys  கோப்பை இயக்கும் பொழுது அதற்கு பதிலாக  Command Prompt  திறக்கும்.

இப்பொழுது கணணியை ஒரு முறை ரீஸ்டார்ட் செய்து, வன்தட்டிலிருந்து பூட் செய்யுங்கள்.   Login   திரை தோன்றும் பொழுது  Shift Key  ஐ 5 முறை தொடர்ந்து அழுத்துங்கள். (இப்படி செய்யும் பொழுது வழக்கம்போல  Sticky Keys திறக்காமல், அதற்கு பதிலாக  Command prompt  திறக்கும்)

Command prompt திரையில் கீழே தரப்பட்டுள்ள கட்டளையை கொடுங்கள்.(பயனர்பெயர் (xxx) மற்றும் கடவுச்சொல்லை ( new password ) உங்கள் தேவைக்கு மாற்றிக் கொள்ளுங்கள்)

net user xxx newpassword

அவ்வளவுதான் கடவுச்சொல் மாற்றப்பட்டது. இனி பழையபடி   Sticky Keys   கோப்பை ரீ ஸ்டோர் செய்ய வேண்டும். இதற்கு மறுபடியும் விண்டோஸ் 7 DVD யில் பூட் செய்து  Command Prompt  சென்றுஇ கீழே தரப்பட்டுள்ள கட்டளையை கொடுங்கள்.

c:sethc.exe c:windowssystem32sethc.exe.

Overwrite கேட்கும் பொழுது yes கொடுத்து கொப்பி செய்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் உங்களது கடவுச்சொல் மாற்றப்பட்டு விடும்.

Sunday, January 26, 2014

கொம்பியூட்டரை / கணனியை பராமரிப்பது எப்படி

உங்களது வீட்டு அல்லது அலுவலக கணனியை பராமரிப்பது தொடர்பான வழிகாட்டல். கீழ் வரும் படிமுறைகளை பின்பற்றுவதனூடக உங்களது கணனியை பிழையின்றியும் வேகமாக இயங்கவும் வைக்க முடியும்.


1. முதலாவதாக உங்களது கணனி மடிக்கணனி எனின் தூசு பிடிக்காத இடத்தில் பயன்படுத்துங்கள்,அதனை சுத்தமான கைகளால் கையாள வேண்டும், சிலர் உணவு அருத்திய படியே பயன்படுத்துவார்கள், இது தவறான ஒரு வழிமுறை.  மடிக்கணனி அருகில் எந்த வித உணவுப்பண்டங்களையும் கொண்டு செல்லாதீர்கள், ஏனெனில் இதன் மூலம் மடிக்கனனிக்குள் எறும்புகள் சென்று கணனியை முழுமையாக பழுதடயசெய்துவிடும். அடுத்து மடிக்கனனியின் பட்டெரியினை (Battery) சரியான முறையில் மின் ஏற்றி பயன்படுத்துங்கள்.

அதே சமயம் உங்களது கணனி (Desktop PC) டெஸ்க் டாப் கணனி எனின் அதைக்கூட தூசி இல்லாத திறந்த இடத்தில் காற்றோட்டம் உள்ள இடத்தில் பயன்படுத்துவது நல்லது, அவ்வாறு இட வசதி இல்லாதவர்கள் மாதம் ஒரு தடவை உங்களது கணனி உள்ள இடத்தையும் கணனியையும் சுத்தம் செய்வது அவசியம். எந்த கணனியையும் ஜன்னல் அருகில் வைத்து பயன்படுத்தி முடிந்ததும் ஒரு துணி கொண்டு மூடிவிடுவது நல்லது, ஏனெனில் கணனி ஏலேக்ட்ரோனிக் பொருட்கள் துருப்பிடிக்காமல் இருக்க இது உதவி செய்யும்.

2. கணனியை வேகமாக இயங்கவைக்க நீங்கள் முதலாவதாக செய்யவேண்டியது தேவையற்ற பைல்களை உங்களது வன்தட்டிலிருந்து அழித்துவிடுங்கள், உங்களது கணனியில் உள்ள அண்டிவைரஸ் மென்பொருளை அப்டேட் பண்ணி பயன்படுத்துங்கள்,  அண்டிவைரஸ் மென்பொருள் மட்டும் போதுமென எப்போதுமே கருதாதீர்கள் அத்துடன் Antispyware மென்பொருளும் கூடவே உங்கள் கணனியில் நிறுவி அதனையும் அப்டேட் பண்ணி ஸ்கேன் செய்து பயன்படுத்துங்கள்.super Antispyware என்கிற மென்பொருள் இலவசமாக இங்கு கிடைக்கின்றது, இதனை டவுன்லோட் பண்ணி இலவசமாக பயன்படுத்தலாம்


3. அடுத்து நீங்கள் செய்ய வேண்டியது "Disk Defragment" இந்த வசதியை விண்டோஸ் கணனியில் பெற்றுக்கொள்ளலாம், முதலில் கணனியில் C Drive இனை "Disk Defragment" செய்தல் வேண்டும். எல்லா Drive களையும் செய்வது நல்லது.


4. அடுத்து முக்கியமான விடயம் ஒன்று உள்ளது அதாவது உங்களுக்கு தேவையான சகல கோப்புகளையும் ஒருபோதும் C: drive இல் சேமித்து வைக்காதீர்கள். ஏனெனில் வைரஸ் தாக்கிய கணனிக்கு மறுபடி இயங்குதளம் நிறுவுவதற்கு இலகுவாக இருக்கும். நீங்கள் D:, E:, F போன்ற மற்றைய drive களில் உங்களது கோப்புகளை சேமித்து வைக்கலாம். மிக முக்கியமான கோப்புகளை தனியான வெளியில் உள்ள (Pen Drive, External HDD, Memory card)போன்ற சாதனங்களில் பிரதி எடுத்து வைப்பதே புத்திசாலித்தனமான முடிவு. ஏனென்றால் கணனிக்கு வைரஸ் தாக்கமோ அல்லது வன் தட்டில் (Hard Disk Drive) ஏற்படும் திருத்த முடியாத நிலை ஏற்பட்டாலோ இங்கு நான் குறிப்பிட்ட முறைமை உங்களுக்கு நிச்சயம் கைகொடுக்கும்.

விண்டோஸ் கணனிகளுக்கு சிறந்த Antivirus மென்பொருள்கள்

விண்டோஸ் கணனிகளுக்கு சிறந்த Antivirus மென்பொருட்கள் ஆவன  (Microsoft Security Essentials, Avast free Antivirus, AVG Free Antivirus)

குறிப்பு: விண்டோஸ்  XP cracked இயங்கு தளத்துக்கு Microsoft Security Essentials இனை இலவசமாக பயன்படுத்த முடியாது.

உங்களது கணனியில் பிரதானமாக இருக்க வேண்டிய மென்பொருட்கள்

உங்களது கணனியில் பிரதானமாக இருக்க வேண்டிய மென்பொருட்கள்

Adobe PDF Reader, Adobe Flash Player, VLC Media Player and K-lite codec, Skype, Google Chrome, SuperAntispyware, Microsoft Security Essentials, CCleaner) இவ்வாறான மென் பொருட்களை இலவசமாக இங்கு தரவிறக்கம் செய்யலாம் Free Windows Apps

குறிப்பு: உங்களது கணனியில் சகல ஆடியோ வீடியோ போர்மட்டுக்களையும் Windows Media Player இல் சரியாக இயங்க வைப்பதற்கு K-Lite Codec Pack உதவுகின்றது

Photoshop மென்பொருள் போன்ற இலவச மென்பொருள்களை தரவிறக்கம் செய்வதற்கு

போட்டோக்களை அழகாக எடிட் செய்ய உதவும் மென்பொருள் Photoshop ஆகும். ஆனால் Photoshop மென்பொருள் இலவசமல்ல. காசு கொடுத்து வாங்க வேண்டும். இதனால் பெரும்பாலானவர்கள் Photoshop மென்பொருளை crack செய்து பயோகிக்கின்றனர். அதில் நீங்களும் ஒருவர் என்றால் இனி கவலையை விடுங்கள் Photoshop போன்றே அதே சமயம் 100% இலவசமாக ஒரு மென்பொருள் Gimp ஆகும். இந்த மென்பொருளில் Photoshop-ல் உள்ள 90% சதவீத வசதிகள் இதில் உள்ளது. இன்னும் சொல்ல போனால் Photoshop-ல் இல்லாத ஒரு சில வசதிகளும் இந்த Gimp மென்பொருளில் இருக்கிறது. இவ்வளவு வசதிகள் இருந்தும் இந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கின்றது.   இந்த மென்பொருளின் புதிய பதிப்பான GIMP 2.6.12 வெளிவந்துள்ளது.

சிறப்பம்சங்கள்:
1. இந்த மென்பொருளை உபயோகிப்பது மிக சுலபம்.
2. சாதரணமாக Ms paint உபயோகிப்பது போல இருக்கும்.
3. TIFF, JPEG, GIF, PNG, PSD போன்ற image format-களுக்கு support செய்கிறது.
4. முற்றிலும் இலவசமான மென்பொருள்.
5. மென்பொருள் இயங்க Photoshop போன்று கணினியில் அதிக இடம் எடுத்துக் கொள்ளாது. ஆகவே இதனை உபயோகிக்கும் பொழுது உங்கள் கணினியின் வேகம் குறைவதில்லை.
6. போட்டோக்களை சுலபமாக உயர்தரத்தில் மாற்றிக் கொள்ளலாம்.
7. Linux, Mac, Windows போன்ற கணினிகளில் இயங்கக் கூடியது.
இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய. http://sourceforge.net/projects/gimp-win